பொதுவாகவே படித்த இளைஞர்கள் பலரும் தங்களின் வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காததால் பல சொந்த தொழில் செய்து  வருகிறார்கள். அதே சமயம் தங்களின் மன நிறைவுக்கு ஏற்ப சொந்தத் தொழில் செய்து வருபவர்களும் ஏராளம். இன்னும் சொல்லப்போனால் சாதாரண மக்களை விட படித்த இளைஞர்கள் தான் அதிக அளவு சொந்த தொழில் செய்து வருகிறார்கள். ஏனென்றால் சொந்த தொழிலில் யாருக்கும் கைகட்டி பதில் சொல்ல வேண்டிய நிலை இருக்காது.

அதே சமயம் அதில் மனநிறைவும் அதிகமாக இருக்கும். ஒவ்வொருவரும் புதுவிதமான தொழிலை செய்து வரும் நிலையில் இங்கு இரண்டு நண்பர்கள் சேர்ந்து செய்து வரும் தொழில் பலரையும் வியக்க வைத்துள்ளது. பொதுவாகவே டீ பிரியர்கள் அதிகம். அவர்களுக்கு டீ குடிப்பதற்கு என நேரம் காலம் கிடையாது. குறிப்பாக இரவு நேரங்களில் டீ குடிப்பதை பலரும் விரும்புவார்கள். ஆனால் இரவு நேரங்களில் டீக்கடைகள் அதிகம் இருப்பது சிக்கலான ஒன்றுதான்.

இதனை நினைவில் கொண்டு மும்பையில் மன்னுஷர்மா மற்றும் அமீர் கஷ்யப் என்ற இரண்டு நண்பர்கள் இரவில் டீக்கடை வைக்க வேண்டும் என்று நினைத்துள்ளனர். அதுவும் சாதாரணமாக அல்ல தங்களின் ஆடி கார் மூலமாக டீ விற்பனையை தொடங்கியுள்ளனர். ஆடம்பர ஆடி கார் மூலமாக இரண்டு நண்பர்களும் சேர்ந்து மும்பையை கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் இவர்களின் டீ தரமானதாகவும் வெறும் 20 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்து வருகிறார்கள்.

இவர்களில் மன்னு சர்மா ஆப்பிரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். மற்றொருவரான அமித் கஷ்யப் பங்குச்சந்தை வர்த்தகம் செய்து வரும் நிலையில் இருவரும் மாலை நேரத்தில் ஆடி கார் மூலமாக டீ வியாபாரம் செய்து வருகிறார்கள். இவர்களின் இந்த செயல் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் பலரையும் வியக்க வைத்துள்ளது.