தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். அதாவது பழைய ஓய்வூதிய திட்டம், ஷிப்ட் முறைப்படி பணிக்கு வருதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

அவர்கள் இன்று 8 மணி நேர ஸ்ட்ரைக் போராட்டத்தை அறிவித்துள்ளனர். மேலும் இதனால் இன்று டாஸ்மாக் கடைகள் இயங்குமா  இயங்காதா என்பது சரிவர தெரியவில்லை. மேலும் தமிழ்நாடு முழுவதும் இன்று டாஸ்மாக் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக முன்கூட்டியே அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.