தமிழகத்தில் உள்ள கோயில்களை மாநில அரசு ஆக்கிரமித்து உள்ளதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு. கோயில்களை கட்டுப்பாட்டில் வைத்து அதன் சொத்துக்கள்,  வருமானத்தை முறைகேடாக பயன்படுத்துவதாக பிரதமர் மோடி புகார். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும். சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களை தென்னிந்திய மாநில அரசுகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவில்லை.

தமிழகத்தில் உள்ள தனது கூட்டணி கட்சியிடம் காங்கிரஸ் பேசி கோயில்களை விடுவிக்குமா ?  எனவும் பிரதமர் கேள்வி எழுப்பி உள்ளார். கோயில்களை மாநில அரசு கட்டுப்பாட்டில் வைப்பது அநியாயம் எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெலுங்கானாவில் பேசி உள்ளார்.