திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, சில பேர் கேட்கலாம். இப்ப புள்ளைங்க நிறைய பேர் பாஸ் ஆகுறாங்களே  நீட்ல. அதனால உங்களுக்கு என்ன எதிர்ப்பு இருக்குனு ? என்ன தேர்வு  வந்தாலும், வெற்றி பெற்று காட்ட  கூடியவர்கள் தமிழர்கள். அதனால நீங்க என்ன தடை  கொண்டு வந்தாலும், எங்களால் அதைத் தாண்டி காட்ட முடியும். ஆனால் அந்த தடையை உருவாக்குவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை என்பது தான் இந்த போராட்டம். அதனால் தான் எங்களுடைய பிள்ளைகள் இன்று மனமுடைந்து போகிறார்கள்.

நான் கஷ்டப்பட்டு படிக்கிறேன். பள்ளிக்கூடத்துக்குபோறேன்.  எத்தனையோ தடையை மீறி படிக்கக்கூடிய ஒரு நிலைக்கு நான் கொண்டுவரப்பட்டிருக்கிறேன். இத்தனை தலைமுறை போராட்டத்திற்குப் பிறகு…  அதற்கு பிறகும் நீட் என்ற,  எனக்கு சம்பந்தமே இல்லாமல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலே ஒரு பரீட்சை வைத்து,  அதுவும் அந்த மல்டிபிள் சாய்ஸ் அப்படின்னு வைக்கக்கூடியது தான் தேர்வு முறையா ?  ஒரு மாணவனோ… மாணவியோ அந்த மல்டிபிள் சாய்ஸ்ல ஒரு பதிலை தேர்ந்தெடுத்து,

ஒரு  கேள்விக்கு பதில் சொல்கிறார்கள் என்றால் ? ஒரு தவறான பதிலை எழுதி விட்டால்,  அவர்களுக்கு மார்க் இல்லாமல் போறது மட்டுமல்லாமல்,  மார்க் குறைக்கிறார்கள். ஒரு தப்புக்கு ஒரு மார்க் குறைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு தேர்வு தான் அந்த பிள்ளை மருத்துவ கல்லூரிக்கு போவதற்கு தகுதியா ? இந்த தகுதி இல்லை என்றால் ?  சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை தாண்டி வராத அந்த பிள்ளைகளுக்கு மருத்துவக் கல்லூரிக்கு போவதற்கான அனுமதியே இல்லையா ? என்று சொல்லக்கூடிய அந்த நிலை வரும்போது….

தனக்கு ஒரு அநீதி நடக்கிறது. என்னால் பாஸ் பண்ண முடியலன்னா அந்த மாணவனோ, மாணவியோ புரிந்து கொள்வார்கள். அடுத்த முறை இன்னும் படித்துவிட்டு எழுதனும்னு நினைப்பாங்க. எனக்கு ஒரு அநீதி நடக்கிறது.. சமூகத்தில்  நான் அழுத்தப்படுகிறேன் என்று அவர்கள் நினைக்கும் பொழுது தான்…  அங்கே அவர்கள் மனம் உடைந்து போகிறது. இந்தக் தடைகளை….  இந்த சமூக அநீதியை என்னால் தாண்ட  முடியாது.

ஒரு 12-ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவனோ, மாணவியோ இதை எப்படி தாண்ட முடியும் என்ற அந்த மனமுடைந்து போகக்கூடிய சூழலிலே தான் அவர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதில் இருக்கக்கூடிய ஆளுநர் எந்த நிலையிலும் நான் இதிலே கையெழுத்து போட முடியாது என்று சொல்லி..  வெந்த புண்ணிலே வேலை பாய்ந்து கொண்டிருக்கக் கூடிய உங்களைத் தாண்டி அது போயாச்சு. பார்லிமென்ட்டை திறக்கறதுக்கு ஜனாதிபதியை கூப்பிட மாட்டீங்க.

பாஜக ஆட்சியில் அந்த அவமானம் போதாது என்று ? ஜனாதிபதி முடிவு செய்ய வேண்டிய இடத்தில் இருக்கக்கூடிய ஒன்றை,  இங்கே இருக்கக்கூடிய கவர்னர் நான் கையெழுத்து போட மாட்டேன் அப்படின்னு சொல்லி,  தமிழ் மக்களையும், அங்கே இருக்கக்கூடிய குடியரசு தலைவரையும் ஒன்றாக அவமானப்படுத்தக்கூடிய ஒரு நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் எதிர்த்து தான் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.