வேலூர் அணைக்கட்டு அருகில் ஊனை கிராமத்தில் பழங்குடியினர் வாழ்வாதார மேம்பாட்டிற்காக சொந்த வீட்டு மனை உள்ள பழங்குடியினருக்கு பழங்குடியினர் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 15 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.

இதையடுத்து நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது, “நீண்ட காலமாக குடிசை வீடுகளில் வசித்து வரக்கூடிய பழங்குடியின மக்களுக்கு அரசு வீட்டுமனை பட்டா, வீடு கட்டுதல் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பல திட்டங்களின் வாயிலாக செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் இன்னும் ஒருசில மாதங்களில் மகளிருக்கான உரிமைத்தொகை மாதம் ரூ.1000 வழங்கப்படும். கிராமப்புறங்களில் உள்ள மகளிர், நகரங்களுக்கு செல்லும் போது உள்ளூர் பேருந்துகளில் கட்டணமில்லா பயணிக்க சிறப்பான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் வாயிலாக பல கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர் என அவர் பேசினார்.