தமிழகத்தில் 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி முதல் கட்டமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வினாடி வினா நிகழ்ச்சி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையும், 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமையும், 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதன்கிழமையும், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு வியாழக்கிழமையும் வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். தற்போது தேர்வுகள் நடைபெற்று வருவதால் மாணவர்களுக்கு வினாடி வினா போட்டியை பிற்பகல் நேரத்தில் நடத்திக் கொள்ளலாம். மேலும் மாணவர்களுக்கு வினாடி வினா பயிற்சி கொடுக்க ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மட்டும் தான் போட்டியை நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.