பிப்ரவரி 14 ஆம் தேதி இன்று காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த 1997 ஆம் வருடம் ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் லியனார்டோ டிகாப்ரியோ-கேட் வின்ஸ்லெட் நடிப்பில் உருவாகி காதல் காவியம் என போற்றப்படும் “டைட்டானிக்” திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பின் மீண்டும் ரிலீஸ் செய்யபட்டுள்ள இந்த படம் தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாகி வருகிறது.

இந்தப் படம் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பை பெற்றதோடு, பெரும்பாலான விருதுகளையும் வாரிக் குவித்தது. எண்ணிலடங்கா சிறப்புகளை உடைய டைட்டானிக் படம் வருடங்கள் கடந்தும் சினிமா வரலாற்றில் மூழ்காமல் மிதந்து கொண்டிருக்கிறது. கால் நூற்றாண்டை கடந்து காதல் காவியமாக நிலைத்து உள்ளது இந்த டைட்டானிக் படம்.