இங்கிலாந்து அணிக்கு எதிராக ஜனவரி மாதம் 22 ஆம் தேதி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதில் 5 டி20 போட்டிகள் 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெறும். இந்தத் தொடரில் இந்திய அணியின் வீரர் கே. எல், ராகுல் ஓய்வு எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. “இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தனக்கு ஓய்வு வேண்டும் எனவும், உலக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்பதாகவும் தெரிவித்துள்ளார்” என பிசிசிஐ வட்டாரங்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள உலக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி துபாயில் விளையாட உள்ளது. மற்ற போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறும். கே. எல். ராகுல் ஓய்வு பெற்றதை அடுத்த ரிஷப்பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய வீரர்கள் விக்கெட் கீப்பர்களாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.