பழம்பெரும் நடிகர் என்டி ராமராவ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது தெலுங்கு தேச கட்சியின் நிறுவனரும் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு தான் ஹைதராபாத் வளர்ச்சிக்கு காரணம் என ரஜினிகாந்த் கூறினார். இது ஒய்எஸ்ஆர் கட்சியினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரஜினிக்கு எதிர்வினை ஆட்சி வருகிறார்கள். அந்த வகையில் ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும் ஒய்எஸ்ஆர் கட்சியின் நிர்வாகியுமான ரோஜா நடிகர் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் 2004-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை இழந்தது. அதன்பிறகு 2014-ஆம் ஆண்டு ஆந்திரா பிளவு பட்டு ஐதராபாத் தனி மாநிலமாக உருவெடுத்தது. 2014-ம் ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவை ஆட்சி செய்தது.

கடந்த 20 வருடங்களாக தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடுவுக்கும் ஹைதராபாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் ஹைதராபாத்தின் வளர்ச்சிக்கு காரணம் சந்திரபாபு நாயுடு தான் என ரஜினி கூறியுள்ளார். நடிகர் ரஜினிக்கு தெலுங்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. ரஜினியின் கருத்து என்டிஆரின் ஆன்மாவை புண்படுத்தும். சட்டசபையில் வைத்து என்டி ராமராவை சந்திரபாபு நாயுடு எப்படி அவமானப்படுத்தினார் என்பது தொடர்பான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை நான் ரஜினிக்கு அனுப்பி வைப்பேன் என கூறியுள்ளார். மேலும் ரஜினிக்கு எதிராக அமைச்சர் ரோஜா பேசியதால் அடுத்து வரும் தேர்தலில் அவர் வெற்றி பெறுவது கடினம் தான் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.