தமிழக பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்கள் தகுதி தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது. ஆனால் தகுதி தேர்வுகளை நடத்தி ஆசிரியர்களின் நியமிப்பதில் கால தாமதம் ஆவதால், மாணவர்களின் கற்பித்தல் திறனை மனதில் வைத்துக் கொண்டு, அந்தந்த பள்ளிகளில் உள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு அரசு ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் வழங்கி வருகிறது.

அதன் பிறகு பள்ளிக்கல்வித்துறை அண்மையில் 400-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அனுமதி கொடுத்தது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக தமிழக அரசு 109 கோடி நிதியை விடுவித்துள்ளது.