கரூர் மாவட்டத்திலுள்ள காந்தி கிராமத்தில் தெரேசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வைத்து பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

அதன் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி விழாவில் கலந்து கொண்டவர்களிடம் முதல்வர் ஸ்டாலினால் தமிழக பள்ளிகளில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து விவரித்தார். அதன் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி புதுமைப்பெண் திட்டம் குறித்து யாராவது ஒருவர் வந்து மேடையில் பேசுமாறு அழைத்தார்.

அப்போது ஒரு மாணவி தைரியமாக வந்து புதுமைப்பெண் திட்டம் குறித்து மேடையில் பேசினார். அந்த மாணவி மாணவி புதுமைப்பெண் திட்டம் குறித்து தைரியமாக பேசியதால், அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த மாணவியை பாராட்டி ஒரு புத்தகம் மற்றும் 500 ரூபாய் பரிசு வழங்கினார். அதன் பிறகு மாணவியிடம் உங்கள் தொகுதியின் எம்எல்ஏ யார் தெரியுமா என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்க அந்த மாணவி தெரியாது என்று கூறினார். அதன் பிறகு மேடையில் நின்ற குளித்தலை தொகுதி எம்எல்ஏ மாணிக்கம் நான்தான் உங்கள் தொகுதியில் எம்எல்ஏ என்றும் மாணவியிடம் கூற உடனே மேடையில் இருந்து அனைவரும் சிரித்தனர்.