
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் வாட்ஸ்அப், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களை அதிகமாக பயன்ப்படுகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இது போன்ற சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி வருகின்றன. ஆனால் விமானத்தில் பயணம் செய்யும்போது, இத்தகைய இணைய சேவையை பெற முடியாமல் இருந்தது. இதற்கு தீர்வு அளிக்கும் வகையில் தற்போது பயணிகளை குஷிப்படுத்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது விமான பயணிகள் 3000 மீட்டர் உயரத்தில் பயணம் செய்தாலும் யூடியூப், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
விமானம் மற்றும் கடல்சார் விதிகள் 2018 மற்றும் துணைவிதி 1ல் குறிப்பிட்டுள்ளபடி, விமானத்தில் மின்னணு சாதனங்கள் அனுமதிக்கப்படும் போது, WIFI போன்ற இணைய சேவைகளை பயணிகள் பெறலாம் என்ற புதிய விதியை இந்த நவம்பர் மாதம் இந்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் அனைத்து விமான நிறுவனங்களும் இந்த WIFI வசதியை நடைமுறைப்படுத்தும். ஆனால் ஒரு வேலை விமான நிறுவனங்கள் பயணத்தை மேற்கொள்ளும் போது, இணைய சேவையை நிறுத்தினால் நம்மால் சமூக ஊடகங்களை பயன்படுத்த முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.