
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்ள நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது. வருடம் தோறும் கோடை விடுமுறையை ஒட்டி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை விடப்படுகிறது. அந்த வகையில் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஒரு மாதம் கோடை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மே 1 முதல் ஜூன் 1 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை நாட்களில் விடுமுறை கால நீதிமன்றம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்வதற்கு நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்துள்ளது. அதன்படி அவசர வழக்குகளை நீதிபதிகள் மாலா, அருள் முருகன், விக்டோரியா, கௌரி ஆகியோர் மே 7, 8 ஆகிய தேதிகளில் விசாரிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுவாமிநாதன், லட்சுமி நாராயணன், நிர்மலா குமார் ஆகியோர் மே 14, 15, 21, 22 ஆகிய தேதிகளிலும், நீதிபதிகள் செந்தில்குமார், ராமமூர்த்தி, சத்யநாராயணா, பிரசாத், திலகவதி ஆகியோர் மே 28, 29 ஆகிய தேதிகளிலும் விசாரிப்பார்கள். அதேபோன்று மதுரை கிளையில் நீதிபதிகள் தண்டபாணி, சக்திவேல், பாலாஜி, ஜோதிட ராமன், வேல்முருகன், ராமகிருஷ்ணன், ராஜசேகர், ஸ்ரீமதி, விஜயகுமார், வடமலை, ஆனந்த் வெங்கடேஷ், ஷமீன் அகமதி, பூர்ணிமா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.