சேலம் மாவட்டத்தில் உள்ள நல்லியாம்புதூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா(22) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இனியவன்(3) ஜானுஸ்ரீ(1) என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிரியாவின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.