காவேரி காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசை பொருத்தவரை உச்ச நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பித்து இருக்கிறதோ ? ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதற்கான உத்தரவு என்பது உச்சநீதிமன்றம் தனது இறுதி உத்தரவில் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்கள். அந்த உத்தரவை பின்பற்றினாலே போதும் என்று சொன்னார்கள்.பிறகு 10,000 கன அடி,  7200 கன அடி என்று தொடர்ச்சியாக அவர்கள் தங்கள் தரப்பில் நியாயமாக படக்கூடிய  விஷயங்களை  தமிழ்நாடு அரசு சார்பாக சொல்லப்பட்டு கொண்டே வந்தது.

கடைசியில் நிச்சயமாக கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஏனென்றால் கடந்த சில தினங்களாகவே தண்ணீரின் அளவு என்பது குறைந்திருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக 4000 கனஅடிக்கும் குறைவாகத்தான் தண்ணீர் திறக்கப்பட்டிருக்கிறது.காவிரியின் மேலாண்மை வாரியம் கொடுத்த உத்தரவின்படி அடுத்த 15 நாட்களுக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என்று தான் உத்தரவு. அதை கூட காவேரி விவகாரத்தில் கர்நாடக அரசு பின்பற்றவில்லை என்பதை தமிழ்நாடு அரசு கடுமையான புகாராக தெரிவித்தார்கள்.

மேலும் சமீப நாட்களாக காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில்…  கர்நாடக மாநிலத்தில் பெய்து வரக்கூடிய மழை மற்றும் அவர்களது அணைகளில் இருக்கக்கூடிய தண்ணீரின் அளவு,  அவர்களது கால்வாய்களில் தேங்கி இருக்கக்கூடிய தண்ணீரின் அளவு உள்ளிட்டவை எல்லாம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் தண்ணீர் திறந்து விட வேண்டிய அளவு. இந்த அளவிற்கு இருந்தால் போதும் என்ற ஒரு விஷயங்கள் எல்லாம் சொல்லப்பட்டது.

கர்நாடகா அரசு சார்பில் திட்டவட்டமாக சொன்னது… எங்களால் தண்ணீர் திறந்து விட எந்த  வகையிலுமே முடியாது என்பதை அவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கடைசியாக புள்ளி விவரங்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்த காவேரி ஒழுங்காற்று குழு தற்பொழுது அடுத்த 15 நாட்களுக்கு காவிரியில் இருந்து 5000 கன அடி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்ற ஒரு பரிந்துரையை கொடுத்திருக்கிறார்கள்.இந்த பரிந்துரையை இனி கர்நாடக ஏற்றுக் கொண்டார்கள் என்றால இல்லையென்றால்  பிரச்சனை இல்லை.  மீண்டும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு இரண்டு அரசுகளுமே செல்ல நேரிடும்