பாகிஸ்தான் படையினர் மற்றும் தாலிபான்கள் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையால் எல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானின் இரு நாட்டு எல்லையின் முக்கிய வழித்தடமாக தோர்கம் எல்லைப் பகுதி உள்ளது. இந்த எல்லைப் பகுதி வழியாக பிற நாடுகளுக்கு இடையே வர்த்தக போக்குவரத்து உள்ளது. இரு நாட்டு மக்களும் மருத்துவம் உள்பட பல்வேறு தேவைகளுக்காக எல்லையை கடந்து செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த சில நாட்களாக ஆப்கானிய நோயாளிகளையும் அவரது பராமரிப்பாளர்களும் பாகிஸ்தானுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் தோர்கம் எல்லையில் பாகிஸ்தான் படையினருக்கும் ஆப்கானிஸ்தானின் தாலிபான் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதால் எல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.