இங்கிலாந்தில் லாண்ட் ஆப் வடக்கு பகுதியில் இயங்கி வரும் கிறிஸ்டியன் டோனல் என்பவரின் பார்பர் ஷாப்பில் செலின் என்ற பெண் பணியாற்றிய வந்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தன்று அவர் பார்ட்டியில் பங்கேற்றதை அடுத்து அவருக்கு மறுநாள் திங்கள் அன்று பணிக்கு செல்ல முடியாமல் போயிருக்கிறது. இதனால் விடுப்பு கேட்டு தனது முதலாளிக்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறார். அதில் நான் சொல்வது உங்களுக்கு கோபமாகத்தான் இருக்கும். ஆனால் மன்னித்து விடுங்கள். இன்று என்னால் பணிக்கு வர முடியுமா என தெரியவில்லை. ஏனெனில் எனது உடல்நிலை இப்படி மோசமாகும் என நினைக்கவில்லை. சரியாகிவிடும் என எண்ணினேன். என்னால் இன்று படுக்கை அறையில் இருந்து கூட எழ முடியவில்லை என குறிப்பிட்டு இருக்கின்றார்.

இதனை கண்ட அவரின் முதலாளி பொய் கூறுகிறார் என நினைத்து நீங்கள் வரவே தேவையில்லை. ஏனெனில் உங்கள் வேலை பறிக்கப்பட்டு விட்டது என பதிலளித்து கிறிஸ்டியன் செலினை பணி நீக்கம் செய்துள்ளார். இதனை அடுத்து தொழிலாளர்களுக்கான தீர்ப்பாயத்தில் செலின் வழக்கு தொடரவே அதன் மீதான விசாரணை தற்போது நடத்தி முடிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி நேர்மையாக உண்மையான காரணத்தை கூறிய சலீம் விடுப்பு கோரி இருக்கிறார். மாதவிடாய் அதீத உடல் வலி ஏற்பட்டதாலேயே செலினுக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது. அவரை கவனித்துக் கொள்வதற்காக செலினின் மாமியாரும் அன்று விடுமுறை எடுத்திருக்கிறார் என நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. இதனை அடுத்து உண்மை தெரியாமல் செலினை பணியை விட்டு நீக்கியதற்காக அவரின் முதலாளிக்கு 3,453 பவுண்டு அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 3 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.