திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி வ.உ.சி நகரில் ரமேஷ்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ரமேஷ் வீட்டிலிருந்து வேலைக்கு சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ரமேஷை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த போலீசாரும் பொதுமக்களும் ரமேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து முத்துப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் 21 குண்டுகள் முழங்க ரமேஷின் உடலை தகனம் செய்தனர்.