ரஷ்யாவிடம் போதுமான ஆயுதங்கள் கையிருப்பில் உள்ளதாக முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வதேவ் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி உதவி வருகின்றது. இந்த நிலையில் ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை அமைந்துள்ள இடத்திற்குச் சென்ற டிமிட்ரி மெட்வதேவ் பீரங்கி குண்டுகள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஆய்வு செய்தார்.

பின்னர் பேசிய அவர் ரஷ்யாவிடம் போதுமான ஆயுதங்கள் கையறுப்பில் உள்ளதாக தெரிவித்தார். ரஷ்யாவிடம் ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் குறைவாக இருப்பதாக மேற்கத்திய நாடுகள் கூறிய நிலையில் அதற்கு முன்னாள் அதிபர் சிமிட்ரி மெட்வதேவ் பதில் அளித்துள்ளார்.