மும்பையில் உள்ள மலாடி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில் கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கல்லூரி வாலிபர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த கபடி போட்டியில் கிருத்திக்ராஜ் என்ற வாலிபரும் கலந்து கொண்டுள்ளார். இந்த வாலிபர் கபடி விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென மயக்கம் அடைந்து விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக வீரர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்து கிருத்திக் ராஜை பார்த்தபோது அவர் இறந்திருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசாருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரிழந்த மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கபடி விளையாடிய போது மாணவர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.