புதுச்சேரியில் இந்திய கூட்டணி கட்சி சார்பில் (செப்டம்பர் 18) இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெறவும் பிரீபெய்டு மின் மீட்டர் திட்டம் மற்றும் மின்சார துறையை தனியார் மயமாவதை கைவிட வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசு பேருந்துகளில் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகளின் மீது கல்வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. இதனால் போலீஸ் பாதுகாப்புடன் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பந்த் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்த கல்விச்சு சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.