
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகிலுள்ள உணவகத்தில் உணவு உண்ட எஸ்.எஸ்.ஐ காவலர் காவேரி என்பவர், நிலுவைத் தொகை கேட்ட உணவக உரிமையாளர் முத்தமிழை காலில் உள்ள ஷூவை கழட்டி அடிக்க சென்ற சம்பவம் சிசிடிவி காட்சியில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, காவலர் காவேரி மீது தருமபுரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காவலர் பொதுமக்களை இவ்வாறு நடத்தலாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.