பணியாளர் தேர்வாணையம் பல்வேறு பணியிடங்களுக்கு நடத்தும் தேர்வுகள் மே 6 முதல் ஜூன் 6-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் தேர்தல் காரணமாக தேர்வுகள் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூனியர் இன்ஜினியர் தேர்வுகள் ஜூன் 5 முதல் 7ஆம் தேதி வரையும், selection post தேர்வுகள் ஜூன் 24 முதல் 26 ஆம் தேதி வரையும், மத்திய ஆயுதப்படை டெல்லி போலீஸ் தேர்வுகள் ஜூன் 27 முதல் ஜூன் 29ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.