இலங்கை நாடு கடந்த 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது. இதனுடைய 75 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டமானது கொழும்பு நகரில் உள்ள காளி முகத்திடலில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரியான வி.முரளிதரன் கலந்து கொண்டார்.

இதில் கலந்து கொள்வதற்காக அவர் இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்றடைந்தார். அதன் பின் அவர் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றத்துடன் இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி அலி சாப்ரி ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் அங்குள்ள இந்திய வம்சாவளியினரையும் வி.முரளிதரன் அவர்கள் நேரில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.