
விமானத்தில் பெண் பயணியிடம் அங்கு பணிபுரியும் ஊழியர் கேவலமாக நடந்து கொள்ளும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த ஆண் பயணி ஒருவர் குடிபோதையில் அருகிலிருந்த பெண் மீது சிறுநீர் கழித்ததாக புகார் எழுந்த நிலையில் பெரும் சர்ச்சைக்குரிய நிகழ்வாக பார்க்கப்பட்டது . அதேபோன்று மற்றொரு கேவலமான செயல் தற்போது அரங்கேறியுள்ளது. ஆனால் அது இந்தியாவில் அல்ல, அமெரிக்காவில். அமெரிக்காவை சேர்ந்த ஸ்பிரிட் ஏர்லைன் என்னும் நிறுவனத்திற்குரிய விமானத்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் இரண்டு மணி நேரமாக சிறுநீர் கழிப்பதற்காக அங்குள்ள விமான பணிப்பெண் ஊழியர்களை அணுகியுள்ளார்.
ஆனால் அவர்கள் விசித்திரமான காரணங்களை கூறி கழிவறையை பயன்படுத்த மறுத்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து விமானத்தின் தளத்திலேயே அனைவரின் முன்பும் சிறுநீர் கழிக்கும் கட்டாயத்திற்கு அந்த பெண் பயணி தள்ளப்பட்டார். இப்படியொரு அவலமான சூழ்நிலையை அந்தப் பெண் பயணிக்கு விமான ஊழியர் ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல்,
அவரை வீடியோ எடுக்க தொடங்கி ஹலோ சொல்லுமாறு கிண்டல் செய்துள்ளார். மேலும் உங்களது சிறுநீர் துர்நாற்றம் வீசுகிறது. தண்ணீரை குடித்து அதை மறைத்துக் கொள்ளுங்கள் என கேலியாக பேசி வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைத ளங்கள் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தவே, நாகரிகத்தின் சீர்குலைவிற்கு இதுதான் அடையாளம் என தவறு செய்த பெண் ஊழியரை கண்டித்து தங்களது கருத்துக்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
Woman urinates in the corner of her Spirit Airlines flight, after allegedly being told for 2 hours that she couldn’t use the bathroom
🔗: https://t.co/3na7Qxpm08 pic.twitter.com/OfvymAjK2k— Glock Topickz (@Glock_Topickz) July 22, 2023