நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது பணியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் தைலம் வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் அதிகமான பனி, குளிர் காரணமாக பொதுமக்களுக்கு தொண்டை வலி, சளி, இருமல், காய்ச்சல் என பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. அதனை சரி செய்வதற்கு நீலகிரியில் தைலம் தயாரிக்கப்படுகிறது.

தற்போது தைலம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து நீலகிரி தைலம் தயாரிப்பாளர்கள் கூறியதாவது, நீலகிரியில் தயாரிக்கப்படும் தைலத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இது சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறதுm நீலகிரியில் 20-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தைலம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் 100 மில்லி தைலம் 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.