சட்டீஸ்கரில் நடைபெற்று வரும் காங்கிரஸ் காரிய கமிட்டி மாநாட்டில் சோனியா காந்தி, ராகுல் காந்தி பங்கேற்க போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. சட்டிஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85 ஆவது மாநாடு நேற்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு வியூகம் வகுப்பதற்காக மாநாடு கூடியுள்ளது. மாநாட்டில் முதல் நாளான நேற்று மல்லிகா அர்ஜுனா கார்த்திக் தலைமையில் வழிகாட்டுதல் குழுக்கூட்டம் தொடங்கியது.

இந்த கூட்டத்தில் உயர் பதவிகளுக்கு தேர்தலில் நடத்த வேண்டுமா? இல்லையா? என முடிவெடுக்கப்பட உள்ளது. காங்கிரஸ் கமிட்டி தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட வேண்டும் என இளைஞர்களும் நியமனம் மூலமே நடைபெற வேண்டும் என மூத்த தலைவர்களும் வலியுறுத்தி வருவதால் காந்தி குடும்பத்தின் தலையீடு இருக்கக்கூடாது என்பதற்காக காந்தி குடும்பத்தினர் இந்த கூட்டத்தை புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் காரிய கமிட்டி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.