காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அகில இந்திய தலைவருமான சோனியா காந்தி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி என தகவல் முதலில் வெளிவந்த நிலையில் தற்போது அவருக்கு சுவாச தொற்று பிரச்சனை உள்ளது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை நல்ல சீராக இருப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.