
சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியப்பட்டி பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ரமேஷ் வழக்கம்போல மோட்டார் சைக்கிள் வேலைக்கு சென்றார். இந்நிலையில் வெள்ளாளப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் முன்பு திடீரென சாரைப்பாம்பு தலையை தூக்கியது.
இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ரமேஷ் ஓடும் வண்டியிலிருந்து எகிறி குதித்ததால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த பாம்பு மோட்டார் சைக்கிள் முன்பகுதி, பின்பகுதி என மாறிமாறி சென்றதால் அதனை பிடிக்க சிரமம் ஏற்பட்டது. அப்போது ஒரு வாலிபர் சீட்டை கழற்றி அந்த பாம்பை லாபகமாக பிடித்து புதர் பகுதியில் விட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.