நம் நாட்டின் முக்கியமான நகரங்களில் உள் கட்டமைப்பு வசதிகளையும், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசானது சென்ற 2015ம் வருடம் ஸ்மார்ட்சிட்டி எனும் திட்டத்தினை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்கு தேவையான வசதிகளை அளிக்க அரசு நிதிஒதுக்கீடு செய்து கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதற்கட்டமாக திருச்சி, விசாகப்பட்டினம், கோயம்புத்தூர், இந்தூர், மதுரை, சென்னை ராஞ்சி, புனே, ஆக்ரா, வாரணாசி, அகமதாபாத், ஈரோடு, சேலம், வேலூர், தஞ்சை, புவனேஸ்வர், காக்கிநாடா, போபால் உட்பட 22 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கான பணிகள் மார்ச் மாதம் நிறைவடைகிறது.

தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். இந்த 22 நகரங்களுக்குரிய ஸ்மார்ட் திட்ட பணிகளுக்கு 99,000 கோடி செலவிடப்பட்டு இருப்பதாக அரசு தெரிவித்து உள்ளது. 22 நகரங்கள் போக மீதம் உள்ள 78 நகரங்களில் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அடுத்த 3 (அ) 4 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிட்டு இருப்பதாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.