ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சுராஜித் மஜூம்தார் என்பவர், ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றுவதற்காக நேற்று வந்துள்ளார். “இந்திய அரசியல் சாசனம் மற்றும் கல்விக் கொள்கை” என்னும் தலைப்பில் அவர் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை சிட்டிசன் மன்றம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கருத்தரங்கில் தேச விரோத கருத்துக்களை குறித்து விவாதிக்கப்படுவதாக கூறி ஒரு குறிப்பிட்ட மாணவர் அமைப்பினர் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இதனையடுத்து இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இது குறித்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் பேராசிரியர் சுர்ஜித் கூறியதாவது, தேசத்திற்கு எதிரான சில கருத்துக்களை கூறியுள்ளார் என  கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் அவரை தாக்க தொடங்கியுள்ளனர். மேலும் மாணவர்கள் சிட்டிசன் மன்றத்தின் நிர்வாகியான பிரதீப் நாயக் மற்றும் விரிவுரையாளர் சுரேந்திரா ஜெனா போன்றோரை தரக்குறைவாக திட்டி உள்ளனர். இதனால் நிகழ்ச்சி பாதியிலேயே முடிவடைந்துள்ளது. இருப்பினும் இந்த மோதலுக்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.