இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு போல ரேஷன் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. தமிழக அரசு அனைத்து ரேஷன் கார்டுகளையும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளாக மாற்றியுள்ள நிலையில் இந்த ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் மொபைல் அப்ளிகேஷன் மூலம் பொதுமக்கள் அருகில் உள்ள ரேஷன் கடைகளின் விவரங்களை கண்டறிந்து தேவையான ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்த விவரங்களை இதில் தெரிந்து கொள்ளலாம்.

அதற்கு முதலில் http://www.tnpds.gov.in என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று விருப்பமான மொழியை தேர்வு செய்ய வேண்டும்.

பின்னர் ஸ்மார்ட் கார்டு விருப்பத்தை தேர்வு செய்து smart Card application என்ற பிரிவின் கீழ் உள்ள smart Card application என்பதை கிளிக் செய்து உங்களின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

10KB அளவுக்கு குறைவாக இருக்கும் குடும்ப தலைவரின் புகைப்படத்தை JPEG அளவில் அப்லோடு செய்ய வேண்டும். Pdf வடிவிலான வசிப்பிடச் சான்றிதழை அப்லோடு செய்ய வேண்டும்.

இந்த விவரங்கள் அனைத்தையும் சமர்ப்பித்த பின்னர் விண்ணப்பதாரருக்கு குறிப்பு எண் வழங்கப்படும். இந்த எண்ணை பயன்படுத்தி ரேஷன் கார்டின் நிலையை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.