தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை சார்பாக நடப்பு ஆண்டில் 3,6,9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில கற்றல் அடைவு திறனாய்வு தேர்வு நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வை தமிழகத்தில் 27047 பள்ளிகளில் இருந்து மொத்தம் ஏழு புள்ளி 42 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இந்த தேர்வு கண்காணிப்பு பணிக்காக பி எட் மற்றும் எம்எட் பயிற்சி மாணவர்கள் உட்பட சுமார் 29 ஆயிரத்து 775 கள ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த ஆய்வுக்கான பயிற்சி வழங்கப்பட உள்ள நிலையில் 20 பள்ளிகளுக்கு ஒருவர் வீதம் மொத்தம் 1356 பேர் வட்டார ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மற்றும் கணக்கு ஆகிய பாடங்களில் மட்டும் வினாக்கள் இடம்பெறும் எனவும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணக்கு ஆகிய பாடங்களில் கேள்விகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு ஏற்றவாறு மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.