இந்தியாவில் அழிந்துபோன சிவிங்கிப் புலி இனத்தை மீண்டுமாக அறிமுகப்படுத்தும் அடிப்படையில் “சிவிங்கிப் புலி திட்டம்” கடந்த 2009 ஆம் வருடத்தில் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் துவங்கப்பட்டது. கடந்த வருடம் செப்டம்பரில் நமீபியாலிருந்து 8 சிவிங்கிப் புலிகளை கொண்ட முதலாவது குழு இந்தியா கொண்டுவரப்பட்டது. இதை செப். 17-ம் தேதி தனிமைப்படுத்தலுக்கான பகுதியில் பிரதமா் நரேந்திர மோடி விடுவித்தாா்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட குனோ தேசியப் பூங்காவிலுள்ள 12 சிவிங்கிப் புலிகளுக்கு நேற்று முதல் உணவு வழங்கப்பட்டது. முதல் உணவாக சிவிங்கிப் புலிகளுக்கு 65 -70 கிலோ அளவிலான எருமை இறைச்சி வழங்கப்பட்டது. இவையனைத்தையும் சிவிங்கிப் புலிகள் சாப்பிட்டுவிட்டதாக குனோ தேசிய பூங்காவின் கோட்ட வன அதிகாரி பிகே வர்மா தெரிவித்து உள்ளார். இந்தியாவிற்கு கொண்டுவரப்படுவதற்கு முன் சிவிங்கிப் புலிகளுக்கு பிப்ரவரி 15-ம் தென்னாப்பிரிக்காவில் உணவளிக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.