
நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது மடோன் அஸ்வின் டைரக்டில் உருவாகும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இதையடுத்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை 10 மணிக்கும், பர்ஸ்ட் லுக் டீசர் இன்று மாலை 5 மணிக்கும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பது மட்டுமல்லாமல் “சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்” எனும் பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனம் நடத்தி படங்களை தயாரித்தும் வருகிறார். அதன்படி கடைசியாக அவரது நடிப்பில் வெளியாகிய டான் படத்தை தயாரித்திருந்தார். இத்திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டான நிலையில், அடுத்ததாக அவர் தயாரிக்கவுள்ள 6வது படத்திற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதாவது டைரக்டர் வினோத்ராஜ் இயக்க, சூரி நடிக்கும் “கொட்டுக்காளி” என்ற படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Here's the first look of our next, #Kottukkaali
We're delighted to team up with @PsVinothraj, whose debut film was not only India's official entry to the Oscars but also the IFFR Tiger Award Winner of '21.
Happy to have the super talented @sooriofficial & @benanna_love onboard. pic.twitter.com/7rb154XvBR
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) March 10, 2023