
ZOHO சிஇஓ ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி பிரமிளா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு ஆட்டிசம் குறைபாடு உடைய தன் மகனையும், தன்னையும் நிர்கதியாக விட்டு ஸ்ரீதர் வேம்பு சென்று விட்டதாக அவரது மனைவி கூறினார்.
கலிபோர்னியாவில் தன்னுடன் வாழ்ந்த காலத்தில் அவர் ஜோகோ நிறுவனத்தின் தன் பெயரில் இருந்த பங்குகளை எனக்கு தெரியாமல் அவரது சகோதரி மற்றும் சகோதரி கணவர் பெயருக்கு மாற்றிவிட்டதாகவும் பிரமிளா கூறியுள்ளார். ஆகவே தனக்கு தெரியாமல் அவரது உறவினர் பெயர்களுக்கு சொத்துக்களை மாற்றி இருக்கிறார். கலிபோர்னியா சட்டப்படி மனைவி ஒப்புதல் இல்லாமல் சொத்தை விற்பது சட்ட விரோதமாகும் என பிரமிளா குற்றம் சாட்டியுள்ளார்.