மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று (மார்ச் 13) கூடியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் அமர்வு நேற்று தொடங்கியது. தொடங்கிய முதல் நாளே அமளி காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இரண்டாம் நாளான இன்று அவை கூடியது.

இதனிடையே ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் தீர்மான நோட்டீஸ் குறித்து பேசுவதற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டு, ராகுல்காந்தி குறித்து பேச மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறி மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை மதியம் இரண்டு மணி வரை ஒதுவிக்கப்பட்டது.