பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஜாகித் கிசார் சிங்கங்கள் மற்றும் செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார். இதனால் அவர் அடிக்கடி சிங்கங்களுடன் விளையாடும் வீடியோவை ஷோசியல் மீடியா பக்கத்தில் பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதனிடையே ஜாகித் கிசார் செல்லமாக வளர்க்கும் சிங்கங்களுக்கு பயிற்சி அளிக்கிறார். அத்துடன் தன் நண்பர்களையும் அழைத்து வந்து சிங்கங்களுடன் விளையாட அனுமதிக்கிறார். அதுபோல் ஒருவரை அழைத்து வந்து விளையாட அனுமதிக்கும் போது விபரீதம் ஏற்படுகிறது.

அதாவது, புதியதாக தங்களது கூண்டுக்குள் ஒருவர் இருப்பதை பார்த்த சிங்கங்கள் இரண்டும் அவரை தாக்க முற்பட்டு சுற்றி வளைக்கிறது. அவர் தப்பித்து ஓடுவதற்கு முயற்சிக்கும் போது சிங்கங்கள் தாக்குகிறது. அப்போது பயத்தில் கீழே விழும் நபர் என்ன செய்வதறியாது திணறுகிறார். இந்நிலையில் அந்த நபரின் நண்பர் வந்து சிங்கங்களை விரட்ட தாக்குதலில் இருந்து தப்பிக்கிறார். இந்த வீடியோவானது தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருக்கிறது.