தமிழக அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு பல நேர்முக பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதாவது அரசு நிறுவனங்கள் நடத்தும் போட்டி தேர்வுகளுக்காக இந்த கல்லூரி தனது AIM TN என்றழைக்கப்படும் யூடியூப் சேனல் மூலமாக இணையதள வகுப்புகளை நடத்தி வருகின்றது. என் நிலையில் முதன்முதலாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் காவலர் பதவிகளுக்கு நடத்திய தேர்வுகளுக்கு 100% பயிற்சி காணொளிகளை தயாரித்து பதிவேற்றம் செய்தது. இதனைத் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளுக்கும் பயிற்சி காணொளிகளை பதிவேற்றம் செய்தது.

இந்நிலையில் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் போட்டி தேர்விற்கான இலவச இணையதள வகுப்புகளை இன்று முதல் தொடங்க உள்ளது. இந்த தேர்விற்கான பாடத்திட்டத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து பிரிவுகளிலும் பாடங்கள் கற்பிக்கப்படும். சாகசம் அறுவது என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இணையதள பயிற்சியில் மொத்தம் 180 பயிற்சி காணொளிகள் 60 நாட்களில் பதிவேற்றம் செய்யப்படும். அதே சமயம் 20 மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இந்த தேர்வுகளை நடத்துவதற்காக நோக்கம் என்று பெயரிடப்பட்டுள்ள மென் செயலி ஒன்றை அந்த கல்லூரி தயாரித்துள்ளது. இந்த செயலி ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.