
இங்கிலாந்தின் டெவோனைச் சேர்ந்த பொறியியலாளர் மற்றும் ஸ்கைடைவிங் ஆர்வலரான கேசி ஃப்ளே, சமீபத்தில் ஒரு அசாத்திய அனுபவத்தை சந்தித்துள்ளார். 14,000 அடி உயரத்திலிருந்து, விமானத்திலிருந்து குதிக்கும் போது, அவர் தவறுதலாக தனது iPhone 13 Pro Max ஐ கீழே போட்டுவிட்டார். ஆனால் அதிர்ச்சி அளிக்கக் கூடிய செய்தி என்னவென்றால், அந்த தொலைபேசி தரையில் விழுந்த பிறகும் செயல்பாட்டில் எந்த சிக்கலும் இல்லாமல் மீட்கப்பட்டது.
கேசியின் விங்சூட்டில் வைக்கப்பட்டிருந்த தொலைபேசி, அவர் பாக்கெட்டை மூட மறந்த காரணத்தால் காற்றில் பறந்து கீழே விழுந்தது. ஆரம்பத்தில், அவர் அதை விமானத்திலேயே விட்டுவிட்டதாக நினைத்தார். பின்னர் “Find My iPhone” செயலியின் மூலம் கண்டுபிடிக்க முயன்ற போது, அந்த iPhone ஒரு காட்டுப் பகுதியில், சுமார் 4 மைல்கள் தொலைவில் இருப்பதை கண்டறிந்தார். அதனை மீட்க அவர் 30 நிமிடங்கள் நடந்து சென்றார். முக்கியமாக, முந்தைய நாள் வரை சரியாக இயங்காத தொலைபேசி இப்போது நன்றாக செயல்பட ஆரம்பித்துள்ளது.
இந்த தகவல் சமூக ஊடகங்களில் தீவிரமாக பரவி வருகிறது. கேசியின் அனுபவம், iPhone-இன் தரம் மற்றும் மெய்நிகர் சக்தியை நிரூபிப்பதாக ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். “இதுவே உண்மையான durability டெமோ!” என்று பலரும் கூறியுள்ளனர். இதன் மூலம், Apple நிறுவனம் தனது சாதனங்களுக்கு அளிக்கும் வலுவான கட்டமைப்பையும், அவற்றின் நிலைத்தன்மையையும் மீண்டும் ஒருமுறை உலகிற்கு நிரூபித்திருக்கிறது.