பேட் ஃபிஷ் என்று அழைக்கப்படும் திருக்கை மீன் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரின் தலையை தடவி செல்லும் காட்சிகள் வைரலாகி வருகின்றது. இந்த வகை மீன்கள் தங்களின் கொடுக்குகள் மூலம் விஷத்தன்மை வெளிப்படுத்தும் என்பதால் இதன் அருகே நீச்சல் அடிக்கும் போது மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதன்படி இந்த மீன் அருகே வந்ததும் நீச்சல் வீரர் சற்று பீதி அடைகிறார். ஆனால் அந்த மீன் தலையை தடவி விட்டு நகர்ந்து செல்கிறது. இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.