பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் கடந்த ஜனவரி  மாதம் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். உலகம் முழுவதும் பதான் திரைப்படம் வசூல் சாதனை புரிந்து வருகிறது.

 

அதன்படி பதான் திரைப்படம் ரூ. 1009 கோடி வரை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்த தகவலை பட குழு போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்தியிருந்தது. பதான் திரைப்படத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் சர்ச்சைகளை எல்லாம் தாண்டி பதான் திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. பாலிவுட் சினிமாவில் சமீப காலமாக முன்னணி ஹீரோக்களின் படங்கள் கூட வெளியாகி படுதோல்வியை சந்தித்த நிலையில் தற்போது பாலிவுட் சினிமாவுக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக பதான் திரைப்படம் ஆயிரம் கோடி வரை வசூல் சாதனை புரிந்துள்ளது.

இந்நிலையில் பதான் திரைப்படத்தின் புதிய வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஹிந்தியில் மட்டும் தான் திரைப்படம் 526 கோடி வரை வசூல் சாதனை புரிந்து பாலிவுட்டில் அதிக வசூல் சாதனை புரிந்த முதல் படம் என்ற பெருமையை பதான் பெற்றுள்ளது. இதற்கு முன்பாக பாகுபலி 2 ஹிந்தியில் 510 கோடி வசூலி திறந்த நிலையில் தற்போது அந்த சாதனையை பதான் முறியடித்துள்ளது. மேலும் பதான் திரைப்படத்தின் வெற்றியை ஷாருக்கானின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.