ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் மார்ச் 23 அன்று ஷாஹீத் திவாஸ் அல்லது தியாகிகள் தினமானது கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளானது மகாத்மா என்று மரியாதையாக அழைக்கும் காந்தியின் நினைவு நாளை குறிக்கிறது. இந்த தினத்தில் ஒடுக்கப்பட்ட ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற போராடிய போது தங்களுடைய உயிரையே தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் போது மகாத்மா காந்தியினுடைய அகிம்சை கொள்கைகளை எதிர்த்தவர்கள் பலரும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தினத்தில் டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் இந்திய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், விமானப்படை மற்றும் கடற்படை தலைவர்கள் அஞ்சலி செலுத்துவார்கள். சுதந்திர போராட்ட தியாகிகளுடைய நினைவாக ஜனவரி 30 அன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2 நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்படுகிறது. தேசத் தியாகிகள் உடைய தியாகத்தை போற்றும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.