உத்தரபிரதேச மாநிலம் அம்பேத்கர் மாவட்டத்தில் உள்ள அக்பர்பூரில் 1910 ஆம் வருடம் மார்ச் 23 அன்று பிறந்தவர் சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய பொதுவுடமை அரசியல்வாதிகளின் முன்னோடி என போற்றப்படுவருமான ராம் மனோகர் லோகியா. இவர் தன்னுடைய 10 வயதில் தந்தையோடு சேர்ந்து சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1928 ஆம் வருடம் மாணவராக இருந்த இவர் சைமன் கமிஷனை எதிர்த்து தன்னுடைய பகுதியில் போராட்டம் நடத்தினார். அந்த வருடம் காசி இந்து பல்கலைக்கழகத்தில் இவர் இடுநிலை படிப்பை முடித்திருந்தார்.

இவருடைய தந்தை காங்கிரஸ் கட்சி தலைவர். மகாத்மா காந்தியின் தீவிர விசுவாசியும் கூடம் அவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டத்தை பெற்று பெர்லின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததும் மூன்றே மாதத்தில் ஜெர்மன் மொழியை கற்றார். அதன் பிறகு 1932 ஆம் வருடம் இந்தியா திரும்பினார். இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து 1934 காங்கிரஸ் கட்சிக்குள் இயங்கும் காங்கிரஸ் சோசியலிஸ்ட் கட்சியை தொடங்கினார். பல்வேறு முக்கிய போராட்டங்களை நடத்தி முக்கிய தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டதால் கட்சியின் தலைமை பொறுப்பு ஏற்றார்.

மும்பையில் காங்கிரஸ் ரேடியோ என்று ரகசிய வானொலியில் மூன்று மாதங்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்தார். காங்கிரஸ் மாத பத்திரிக்கையான இன்குலாப் இதழை வெளியிட்டதனால் எரிச்சல் அடைந்த பிரிட்டிஷ் அரசு இதுவரை கைது செய்வதற்கு தீவிர முயற்சியை மேற்கொண்டது. ஆனால் பல்வேறு வேடங்களில் முதலில் கல்கத்தாக்கும் பின்னர் நேபாளத்துக்கும் சென்றார். அதன் பிறகு மும்பை திரும்பியதும் கைது செய்யப்பட்டு லாபூர் சிறையில் அடைக்கப்பட்டார். காந்திஜியின் தலையிட்டால் இவரும் ஜெயப்பிரகாஷ் நாரயணனும் விடுதலை செய்யப்பட்டனர். இந்திய அரசியல் வரலாற்றின் மகத்தான ஆளுமைகளின் ஒருவரான இவர் 1967ஆம் வருடம் தன்னுடைய 57 வது வயதில் காலமானார்.