சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு நீல, பச்சை, ஊதா, காவி, சிவப்பு ஆகிய  வழித்தடங்களில் புதிதாக மெட்ரோ ரயில் சேவை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் 2026-ம் ஆண்டுக்குள் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், மெட்ரோ ரயில் சேவையுடன் போதிய இணைப்பை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள 7 சாலைகளை விரிவாக்கம் செய்வதற்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் முடிவு செய்துள்ளது.

இதற்காக சுமார் 18 மீட்டர் வரை நிலத்தை கையகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இதற்காக ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு முதல் கட்ட சர்வே மற்றும் புதிய திட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது. இது தொடர்பான இறுதி அறிக்கை இந்த மாதத்தின் இறுதியில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிதாக கையகப்படுத்தப்படும் நிலங்களில் வாகன பயன்பாடு மட்டுமின்றி நடைபாதை போன்ற பிற பயன்பாடுகளுக்கும் தனித்தனியாக பாதை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.