செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாலரை வருஷம் முடிஞ்சிருச்சு. இப்ப பாராளுமன்ற தேர்தல் வருது. ரெண்டு வருஷம் அவங்கள சுதந்திரமா விட்டாங்க. இப்ப கூட்டணி தன்னோட வரலைன்றதும்,  அமலாக்கத் துறைன்றாங்க….  வருமானவரித் துறைன்றாங்க…  இதெல்லாம் எப்ப நடந்தது சொல்லுங்க?

செந்தில் பாலாஜி மேல போடப்பட்ட வழக்கு விசாரணையே….  பத்தாண்டுக்கு முன்னாடியே அம்மையார் ஜெயலலிதா காலத்துல அவர் அமைச்சரா இருந்தப்ப நடந்தது. அந்த குற்றத்துக்கு பொறுப்பேற்க வேண்டியது யாரு ? திமுக இல்லை. இந்த ஆட்சியில் நடந்த குற்றம் என்றால் அது தனி. அய்யா பொன்முடி  மேல உள்ள வழக்கு இப்ப போட்டது இல்ல.

அப்ப நீங்க தேவைப்படும்போது தொடுவீங்க…. இந்த பத்து ஆண்டுகால பதவியில இருந்தீங்களா….  அப்பலாம் என்ன பண்றீங்க ? ரைடு விடாம,  வருமான வரி சோதனை விடாமல்… இந்த அமலாக்கத்துறை சோதனை போகாமல்…. அப்படி வச்சிருப்பீங்க..  தேவைப்படும்போது அதை பேசுவீங்க. இதெல்லாம் எவ்வளவு சந்தர்ப்பவாத அரசியல்,  பழிவாங்கல் இதெல்லாம்… நேர்மையானவர் என்றால் உடனே நடவடிக்கை எடுத்து இருக்கணும் இல்ல என தெரிவித்தார்.