
தமிழக சட்டமன்ற கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது கட்சி எம்எல்ஏக்களை பார்த்து ஆவேசமாக கத்தினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கச்சத்தீவு மீட்பு தொடர்பாக அரசினர் தனி தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குறிப்பிட்டு பேசினார். இதற்கிடையில் எழுந்து பேசிய செங்கோட்டையன் அம்மா ஜெயலலிதாவை விமர்சிக்கும் போது பார்த்துக்கொண்டு சும்மா இருக்கலாமா? என்று தனது கட்சி எம்எல்ஏக்களை பார்த்து ஆவேசமாக கத்தினார். இதனால் எம்எல்ஏக்கள் செல்வப் பெருந்தகை பேசியதற்கு எதிராக அமளியில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதா குறித்து செல்வப் பெருந்தகை பேசியது அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன. அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இடையே ஏற்கனவே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், செங்கோட்டையன் அதிமுக எம்எல்ஏ மீது கோபத்தை வெளிப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.