வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்பி எடுக்க ஏறிய நபர், அது கிளம்புவதற்கு முன்னதாக தானியங்கி கதவுகள் மூடப்பட்டதால் உள்ளே சிக்கிக்கொண்டார். இதனால் என்ன செய்வதென தவித்த அந்நபர் வெளியேற முயற்சிக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதோடு டிக்கெட் பரிசோதகர் (டிசி) வருவதற்கு முன் அவர் கதவைத் திறக்க முயற்சிப்பதை வீடியோவில் காணலாம்.
அந்த ரயில் கதவுகள் கணினி வாயிலாக பூட்டப்படுவதால் திறப்பதற்கு வாய்ப்பில்லை என்று டிக்கெட் பரிசோதகர் கூறுகிறார். இதற்கிடையில் அந்நபர் டிக்கெட் பரிசோதகரிடம் ஒரு தீர்வை வழங்குமாறு கேட்கிறார். அதற்கு டிசியும், இன்னொருவரும் விஜயவாடாவில் தான் இறங்க முடியும் என அவரிடம் கூறினர். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Welcome to East Godavari .
Telugu Uncle got onto the Vande Bharat train in Rajamundry to take a picture and the automatic system locked the doors once the train started moving. 😂😂😂Loving the way the T.C. says "Now next is Vijayawada only" 😂😂😂😂 pic.twitter.com/mblbX3hvgd
— Dr Kiran Kumar Karlapu (@scarysouthpaw) January 17, 2023