நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சீமானுக்கு வடலூர் காவல்துறையினர் சம்மன் அனுப்பினர்.

சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வரும் சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் புகார்கள் பதிவாகியுள்ள நிலையில், வரும் 14ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படி சம்மன் வழங்கப்பட்டுள்ளது.