
தேனி மாவட்டம் உப்புத்துறை என்ற கிராமத்தில் மச்சக்காளை என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள மலையடிவாரத்தில் காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்கு என்று 14 நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து வைத்திருந்தார். இது குறித்து சிலர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது 14 நாட்டு வெடிகுண்டுகள் இருந்து தெரிய வந்தது. இதையடுத்து அந்த வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பியோடிய மச்சக்காளையை தேடி வந்தனர். இன்னிலையில் உப்புத்துறை மலைப்பகுதியில் பதுங்கி இருந்த மச்சக்காளையை காவல்துறையினர் சுற்றுவளைத்து பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.